ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்து நிலையத்தில் நேற்று (26.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு "வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை" என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் (23.04.2026) அன்று நடைபெறவுள்ளது என (15.03.2026) அன்று அறிவித்துள்ளதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம், பொதுமக்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் "வாக்களிப்பு என்பது நம் ஜனநாயகத்தின் அடித்தளம்" "ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்டது" "ஒரு வாக்கு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்" " வாக்கு செலுத்துவது நம் உரிமை மட்டுமல்ல, அது நம் கடமையும் ஆகும்." என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி சென்று வழியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியானது, அந்தியூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி தாலுக்கா அலுவலகம் வரை சென்றடைந்தது.
இன்றைய தினம், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அந்தியூர் பேருந்து நிலையத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் நாட்டுப்புறக்கலைஞரின் தேர்தல் தொடர்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை பார்வையிட்டார்.
தொடர்ந்து அந்தியூர் பேருந்து நிலையத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடிய குதிரையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியா, அந்தியூர் வட்டாட்சியர் இளஞ்செழியன், அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)





.jpg)







