சாரதா மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
May 17, 2023
0
கோபிசெட்டிபாளையம் அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை, கோபி அமுதசுரபி அறக்கட்டளை இணைந்து நடத்திய அன்னதான நிகழ்ச்சியை கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பாக எல் ஐ சி பச்சையப்பன், வி வெங்கடேசன், ராமலிங்கம், பிரபு, கேசவன், கந்தசாமி, பூபதி, குமார், சீனிவாஸ், கே.டி செந்தில்குமார், கோபி அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக பொன்துறை சந்திரசேகரன், நடராஜன், கனகராஜ், மகுடேஸ்வரன், சீனிவாசன், சண்முகம் ஆகியோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.