ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 52 ஆம் ஆண்டு விழா...
May 11, 2023
0
கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 52 ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மறு பூஜை அன்று ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்னதான குழு சார்பில் 14 ஆம் ஆண்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்னதானத்தில் சுமார் 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் பூசாரி விஜயன், அணு வடிவேல், கங்கை கவின், சுரேஷ், அம்மா பெரியசாமி, அனு நாகராஜ், சிவக்குமார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.