ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் இறுதியாண்டு பயின்று வெளியேறும் மாணவர்களுக்கென, இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையினை தலைமையிடமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் "டாடா கன்ஸ்சல்டன்ஸி சர்வீசஸ்" நிறுவனமானது தனது வளாகத்தேர்வினை அண்மையில் சிறப்பாக நடத்தியது.
ஸ்ரீ நந்தா அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைப்பெற்ற இவ்வளாகத் தேர்வினை "டாடா கன்ஸ்சல்டன்ஸி சர்வீசஸ்" நிறுவனத்தின் மனிதவள மேலாளர் திரு.விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் S.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
பின்னர் "டாடா கன்ஸ்சல்டன்ஸி சர்வீசஸ்" நிறுவனத்தின் மனிதவள மேலாளர் திரு.விக்னேஷ் உரையாற்றுகையில், சுமார் 6 இலட்சம் ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் எங்களது நிறுவனம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலிடம் பெற்று சிறப்பான முறையில் இயங்கி வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றார். மேலும் ஜப்பான், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் தனது அலுவலகங்கள் மூலம் வங்கிகள், கல்வி, தகவல் 46 தொடர்பியல், உற்பத்தி. உடல்நலம், பயணம் மற்றும் தளவாடங்கள் போன்ற பிரிவுகளுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை அளித்து வருகிறோம் என்று கூறினார்.
இத்தகைய பணிகளுக்கு தங்களைப் போன்ற பொறியாளர்களை இது போன்ற வளாகத்தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்து, சிறப்பான பயிற்சிக்குப்பின் நிலையான பணியினை அளித்து வருகிறோம் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, அதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நேர்காணலில் பங்கு பெறுவார்கள் என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வளாகத்தேர்விற்கு ஈரோடு, நாமக்கல், வரும் வெவ்வேறு சேலம், பொறியியல் கரூர் மற்றும் கோவை பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழில்நுட்ப கல்லூரிகளிலிருந்து சுமார் 630க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வளாகத் தேர்வினை ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் திரு.எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் கல்லூரியின் முதல்வர் என். செயலர் திரு.எஸ்.திருமூர்த்தி, பொறியியல் ரெங்கராஜன், தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் ச.நந்தகோபால் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் பாராட்டினார்கள்.