சி.பி எஸ்.சி பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கோபி அருகே ஒத்தகுதிரையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி பள்ளியில் தேர்வு எழுதிய அனைவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 12ம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவி லக்ஷிதா 483/500 மதிப்பெண்கள் பெற்றார். மாணவர் ரஞ்சித் 470/500 மதிப்பெண்களும், ராகுல் 469/500 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதே போன்று 10ம் வகுப்பில் தேர்வு எழுதியவர்களில் மாணவி ஷிவானி 483/500 மதிப்பெண்களும், நேத்ரா 478/500 மதிப்பெண்களும், கனிகா 477/500 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து, பள்ளி இயக்குனர்கள் ஜோதிலிங்கம், செங்கோட்டையன், மோகனசுந்தரம், மோகன்குமார், முதல்வர் ராஜேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவியரை பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.