மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் திரு என். நல்ல சிவம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ். ஏ முருகன் அவர்கள் தலைமையில் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சி கட்டிடத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி தயாரிக்கும் முறை பற்றிய பயிற்சி துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில், வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள், பயிற்சியாளர், பயிற்சி பெறுவோர் கலந்து கொண்டார்கள்.