திமுக மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் என் ஆர் நாகராஜ் தலைமையில் கொண்டாடினார்கள்.
May 07, 2023
0
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளபதி மு க ஸ்டாலின் ஆட்சி இரண்டு ஆண்டு நிறைவையொட்டி வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் தலைமையில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் கவுன்சிலர் மெய்யழகன், 14 வது வார்டு செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் விஜய கருப்புசாமி, கைத்தறி நெசவாளர்கள் அணி துணை அமைப்பாளர் மணிமாறன், விவசாய அணி துணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி உட்பட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.