ஈரோடு வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம்...
May 10, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை கண்டித்து கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட மகிளா தலைவர் இந்துஜா வெங்கடாசலம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் கே. எஸ். கோதண்டன், கோபி நகர தலைவர் ஜி. என்.மாரிமுத்து, மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பிரனேஷ் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.