2023 சிபிஎஸ்இ தேர்வுகளிலும் இம் மாணவர்கள் சாதனை படைத்தனர். நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவருமே இந்த கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்து அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே சிறந்த மதிப்பெண் மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முதலிடம் பிடித்த லக்சிதாவே பள்ளியில் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் திரு கே சி கருப்பன் அவர்கள் பாராட்டினார். பள்ளியின் செயலாளர் திரு ஜி பி கெட்டிமுத்து, இயக்குனர்கள் திரு செங்கோட்டையன், ஜோதிலிங்கம், மோகன், குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஷ் உடன் இருந்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு...
June 17, 2023
0
2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் ஈரோடு மாவட்டம் ஒத்தக்குதிரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச மேல்நிலைப் பள்ளியின் மாணவி லக்ஷிதா 640 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகித்தார். அடுத்ததாக மாணவர் மிதுன் சக்கரவர்த்தி 571 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார், மாணவி துஷாரா 541 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார், மாணவி சபரிகா ஸ்ரீ 509 மதிப்பெண்களுடன் நான்காம் இடம் பிடித்தார்.