Type Here to Get Search Results !

அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 5 லட்சம் மதிப்பீட்டிலான இருக்கைகளை வழங்கியும் மற்றும் நாமக்கல் பாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தினை கே ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பீட்டிலான இருக்கைகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன், அதேபோல நாமக்கல் பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்ககட்டிடத்தினை முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கே.ஏ செங்கோட்டையன் 
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் பகுதிகளில் தென்னை விவசாயிகளிடமிருந்து இந்த ஆண்டிற்க்கு 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்ய வேண்டும்,

300 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட வேண்டிய இடத்தில் 75 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது
திமுக அரசு பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில் தேங்காய் நார் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது என மூடப்பட்டுள்ளது

இதனால் தேங்காய் மட்டைகள் விற்பனை செய்ய முடியாத சூழல் இருந்து வருகிறது

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்
இந்தியாவிலேயே அதிகம் தென்னை மரங்களை வைத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அரசு விரைந்து அந்தப் பணிகளை செய்ய வேண்டும்

ஆகவே 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

அதேபோல ஏப்ரல் மாதம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய்களுக்கு இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை அதனையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.