திருப்பூர் பாராளுமன்றத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த மாபெரும் கண்காட்சியை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமதி கலைவாணி விஜயகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.
9 ஆண்டு சாதனைகளை விலக்கி நாடு முழுவதும் சேவைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையத்தில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கண்காட்சியாக வைக்கப்பட்டது.
பெருங்கோட்ட பொதுச் செயலாளர் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் திரு பாலகுமாரன் அவர்கள் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.
மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ் எம் செந்தில் குமார், மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் மற்றும் ராமச்சந்திரன், திருமதி மகேஸ்வரி, திருமதி அலமேலு மற்றும் மண்டல, மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.