கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தலைமை வகித்தார். கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார், பவானி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் மாரிமுத்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், பவானி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று பெற்று, காப்பீட்டு தொகை செலுத்தி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் செலுத்தி அதன், பின்பு நகராட்சியில் பதிவு செய்து எங்கு மல கழிவு நீரை சுத்தம் செய்யப்படுகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கும் இடத்தில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். மலக்குழியில் பணியாளர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.