கோபிசெட்டிபாளையம் KVB கிளையின் மூலம் ரூபாய் நான்கு இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் இரண்டு வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வழங்கப்பட்டது.
June 13, 2023
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு கோபிசெட்டிபாளையம் கரூர் வைசியா வங்கி கிளையின் மூலம் வங்கி சமுதாய பங்களிப்பு நிதியிலிருந்து ரூபாய் நான்கு இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் இரண்டு வாகனங்களை திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதியதாக வழங்கினர். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்களிடம் வங்கியின் கோவை மண்டல மேலாளர் சீனிவாசன் அவர்கள் இரண்டு வாகனங்களுக்கான சாவிகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் கார்த்திகேயன், துணை மேலாளர்கள் கமல்நாத், கண்ணன், வங்கி நிர்வாகிகள் சலோமி, சந்திரசேகரன் நகராட்சி மேலாளர் ஜோதிமணி, கணக்காளர் பழனியப்பன், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், 10 வது வார்டு செயலாளர் செந்தில்குமார், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர்கள் கலந்து கொண்டனர். வங்கி அதிகாரிகளுக்கு, நகர் மன்ற தலைவர் நகராட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.