கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்குதிரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
உலக அளவில் 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் வருடந்தோறும் ஜூன் 21ஆம் நாள் நடைபெற்று வருகிறது. அதனை ஒட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இன்று தன்னார்வத் தொண்டர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்து தன்னார்வத் தொண்டர்களுக்கு யோகா பயிற்சிகள் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கி கூறினார்.
இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் ஈஷா அறக்கட்டளையின் சார்பாக திரு. கோபாலகிருஷ்ணன் மற்றும் திருமதி. சோபனா ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வத் தொண்டர்களுக்கு யோகா பயிற்சிகளை வழங்கினர்.
முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. கிருஷ்ணகுமார் வரவேற்புரை நல்கினார்.
இப்பயிற்சியில் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாட்டை வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் அஜித்குமார் மற்றும் காயத்ரி ஆகியோர் செய்திருந்தனர்.