ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய மேசை, இருக்கைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைபள்ளி மற்றும் பல்வேறு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் மேசை, இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொண்டு விழா பேரூரை நிகழ்த்தி மேசை, இருக்கைகளை வழங்கினார்.
விழா பேரூரையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் -
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் சிறுவர் பூங்காவிற்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் மதிப்பீட்டிலான இயந்திர விசை படகை பவானிசாகர் பகுதியிலுள்ள தெங்குமரஹடா பகுதியில் உள்ள மாயாற்றில் பொதுமக்கள் வெள்ளத்தின்போது ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருவதை தடுக்க அம்மக்களின் நலன் கருதி பாதுகாப்பான முறையில் ஆற்றை கடக்க இலவசமாக வழங்கப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்சி யை மிஞ்கின்ற அளவிற்க்கு உருவாக்கப்பட்டது, புதியதாக கொண்டு வந்த பாடதிட்டத்தில் 170 கேள்விகள் நீட் தேர்வில் கேட்டகப்பட்டது,
ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது எவ்வாறு கொண்டு வரவேண்டும், மக்கள் எதிர்காலத்ததை நோக்கி செல்ல வேண்டும் என்ற நோக்கில் பணிகளை செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், கோபி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன், முன்னாள் திருப்பூர் எம்பி சத்திய பாமா, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கலிங்கியம் மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.