Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு பணியை மேற்கொண்டார்.  அப்பொழுது கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து காவலர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.  
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது -
தன்னார்வர்கள் நடத்தும் நான் முதல்வன் என்று திட்டத்தை துவக்கி வைக்க வந்தேன்.  வரும் வழியில் கோபி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது இங்கு பதிவேடுகளை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு விட்டது, சில வழக்குகள் விசாரணையில் உள்ளது.  அரசுக்கு எதிராக கழகங்கள் செய்வது போன்ற சட்டவிரோதமான செயல்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பற்றிய பதிவேடுகள் கோபி காவல் நிலையத்தில் சரியாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.  அதற்காக கோபி காவல் நிலைய துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்,  உதவி ஆய்வாளர் அனைவரையும் பாராட்டுகிறேன்.  நான் முதல் முதலாக 1989 இல் கோபிசெட்டிபாளையத்தில் இங்குதான்  காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பணியில் அமர்த்தபட்டேன்.  சுமார் 38 ஆண்டுகள் ஓடிவிட்டது.  பல்வேறு துறையில் பணியாற்றி இப்போது காவல்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.  ஆயிரம் அடி எடுத்து வைக்க முதலடி கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தான் எடுத்து வைத்தேன்.  நான் இங்கு பணியாற்றும் பொழுது சந்தன கடத்தல் வீரப்பன் பிரச்சனை இங்கு அதிகமாக இருந்தது.  கட்டைகளை வெட்டுவது, யானை தந்தங்களை கடத்துவது, காவல் அதிகாரிகளை கொள்வது போன்ற சமூக  விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். அந்தப் பிரச்சினையினால் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திலும், சத்தியமங்கலம் காவல் நிலையத்திலும் இரவு பகல் பாராமல் வேலை செய்தோம்.  இங்கு பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அணுசக்தி விஞ்ஞானி டாக்டர். அப்துல் கலாம் கூறியது போல் கனவு காணுங்கள் இளைஞர்களே உங்கள் முயற்சி வெற்றி பெறும் என்று கூறுவார்,  அதுவே நானும் கூறுகிறேன்.  கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது  என்று கூறினார். 

பின்னர் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர்களிடம் உரையாற்றினார் 10, 12 ம வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 
அதில் பேசும்பொழுது - 
இந்த உலகத்தில் மிகச்சிறந்த ஆயுதம் என்றால் அது கல்விதான்.  நீங்கள் எங்கு சென்றாலும் கல்வி ஒன்றால் மட்டுமே அனைத்தையும் வென்று விட முடியும். உலகிலேயே  நிறுவனம் 1600 கோடி கொடுத்து சுந்தர் பிச்சை எனும் நபரை சி இ ஓ முதன்மை செயல் அதிகாரியாக நியமித்து உள்ளது.  அதற்குக் காரணம் நமது கல்விதான்.  இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் இங்கு சிறந்த கல்வியாளரானால்,  உலகமே உங்களை வரவேற்கும்.  என்னால் படித்த மாணவர்கள் இப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவராகவும், மாவட்ட கண்காணிப்பாளராகவும் இருந்து வருகிறார்கள்.  ஆகவே கல்வி ஒன்றால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.  எனக்குத் தெரிந்த ஒரு மாணவி பார்வை தெரியாமல் இருந்தாலும் கடும் முயற்சி செய்து ஐ எஃப் எஸ் எஸ் என்று அழைக்கப்படும் இந்திய தூதரக அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.  அவரது முயற்சியை நான் பாராட்டுகிறேன்.  ஆகவே மாணவ மாணவியர்கள் முயற்சியை என்றும் விட்டு விடாதீர்கள், முயற்சி செய்து கொண்டே இருங்கள் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  துணை கண்காணிப்பாளர், கல்லூரி முதல்வர், தியாகராஜ் கல்லூரி தாளாளர் தரணிதரன்,  கோபிசெட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் வி தங்கவேல்,  காவல் ஆய்வாளர் சண்முகவேல்,  மற்றும் கோபி காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.