கோபி நகர இந்துமுன்னணியின் சார்பாக கோபி நகர பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று இந்துமுன்னணி கொடியேற்று விழா நடைபெற்றது. இந்துமுன்னணி கோபி நகரதலைவர் முருகேசன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, பிரபாகரன் ஆகியோரது முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் இந்துமுன்னணி பேரியக்கத்தின் கொடியினை கிளைக்கமிட்டிகளில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் இந்துமுன்னணி பேரியக்கத்தின் அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் குரு.ராஜேந்திரன், கோபி நகர பொறுப்பாளர்கள் விமல், சபரி, சந்திரன், பால்ராஜ், அர்ஜீன், கிளைக்கமிட்டி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபி நகர இந்துமுன்னணியின் சார்பாக கோபி நகர பகுதிகளில் பேரணியாக சென்று இந்துமுன்னணி கொடியேற்று விழா...
June 26, 2023
0
சத்ரபதி வீரசிவாஜி அவர்களின் 350ஆம் ஆண்டு முடிசூட்டுவிழாவினை இந்து சாம்ராஜ்ய தின விழாவாக இந்துமுன்னணியின் சார்பாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் சார்பாக மாவட்டம் முழுவதும் கோபி, லக்கம்பட்டி, சத்தி, பவானி, நம்பியூர், கொடிவேரி, T.N.பாளையம், அத்தாணி, அந்தியூர், கவுந்தப்பாடி, திங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்துமுன்னணியின் கொடியேற்று விழா நடைபெற்றது.