கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தினசரி சந்தை பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் தினசரி சந்தை பகுதிகளும் பிரதான சாலை பகுதிகளும் செடி கொடிகள் வெட்டி சாக்கடை சுத்தம் செய்து, அருகில் உள்ள நீரோடையை சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. சமூக தன்னார்வலர்கள் பங்கேற்புடன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், உழவன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், முகம் அறக்கட்டளை உறுப்பினர்கள், மார்க்கெட் சங்க நிர்வாகிகள், வெங்கடேஸ்வரா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிவக்குமார் துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், களப்பணி உதவியாளர் வேலுமணி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஜயன், செல்வகுமார், சக்திவேலு, விஸ்வநாதன் மற்றும் தூய்மை பாரத திட்ட பரப்புறையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
June 13, 2023
0