காமராஜர் 121 பிறந்த நாள் - திருவுருவப்படத்திற்கு கே ஏ செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை...
July 16, 2023
0
கோபிசெட்டிபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, புத்தகம் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய நாடார் சங்கத் தலைவர் கமல் நாடார், முன்னாள் திருப்பூர் எம்பி சத்திய பாமா, அதிமுக மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் கலிங்கியம் அருள் ராமச்சந்திரா, வழக்கறிஞர் ஜெகநாதன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தங்கவேல், மொடச்சூர் குணசேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.