முன்னாள் மாணவர்கள் சங்கதின் சார்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா...
July 16, 2023
0
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கதின் சார்பாக கடந்த கல்வி ஆண்டில் 6 - ஆம் வகுப்பு முதல் 12 ஆம் ஆண்டு வகுப்பு வரை அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவருமான பாவா கே.பி.தங்கமணி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பி.சசிக்குமார், இணைச்செயலாளர் எஸ்.நந்தகோபால், பொருளாளர் கே. நாச்சிமுத்து, செயற்குழு உறுப்பினர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார். முன்னதாக முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மதியழகன் வரவேற்று பேசினார்.விழா முடிவில் வெள்ளியங்கிரி நன்றி கூறினார். விழாவில் முன்னாள் மாணவர் சங்க புரவலர்கள் டாக்டர்.கே.எஸ்.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கே.எஸ்.குருசாமி உட்பட முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.