*நம்ம கோவில்!!*
*நாமே பாதுகாப்போம்*
இந்துமுன்னணியின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைப்பிரச்சாரமானது மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் சார்பாக மாவட்ட முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
அதனையொட்டி கோபி நகர இந்துமுன்னணியின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைப்பிரச்சாரமானது கோபி பேருந்து நிலையத்தில் துவங்கி ஜீவாசெட், நஞ்சகவுண்டம்பாளையம், மேட்டுவலவு, சரவணாதியேட்டர்ரோடு, கடைவீதி, வாய்க்கால்ரோடு, கச்சேரிமேடு, கள்ளிப்பட்டி மற்றும் கோபி நகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்துமுன்னணி கோபி நகர தலைவர் முருகேசன் தலைமையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். இப்பிரச்சாரத்தில் இந்துமுன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் நகர பொதுச்செயலாளர் சபரி, நகர பொறுப்பாளர்கள் விமல், பால்ராஜ், நல்லசாமி, பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல சத்தியில் மாவட்டதலைவர் குருசாமி, கொடிவேரியில் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், கடம்பூரில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், தாளவாடி, T.N.பாளையம், அத்தாணி, பவானியில் மாவட்ட செயலாளர்கள் பாலமுருகன், சிவக்குமார், நாகராஜ், பவானி மேற்கு, லக்கம்பட்டி, புளியம்பட்டி, நம்பியூர் பகுதிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சம்பத், கார்த்தி ஆகியோரது தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனைப்பிரச்சாரமானது நடைபெற்றது.
இப்படிக்கு
என்றும் தேச,தெய்வீகப்பணியில்,
இந்துமுன்னணி,
கோபி நகர்,
ஈரோடு மேற்கு மாவட்டம்...