கோபிசெட்டிபாளையத்தில் சொந்த நிதியிலிருந்து 16.5 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை K.A செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
July 11, 2023
0
கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டூர் இந்திரா நகர் செங்கோட்டை ஏரியின் சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள படகு இல்லத்துக்கு தேவையான மேற்கூரை பணிகள், அமரும் இருக்கைகள், டைல்ஸ் தளம் போன்றவற்றை சொந்த நிதியிலிருந்து 16.5 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான K.A செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்தார். அருகில் கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம் பி சத்தியபாமா, குழு தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன், வக்கீல்.வேலுமணி, கலிங்கியம் அருள் ராமச்சந்திரா, மொடச்சூர் ஊராட்சிதலைவர் கருப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் அனுராதா, அழுக்குளி செயலாளர் பாண்டுரங்கன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.