மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்துமுன்னணியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரத்தை நடத்துவது என தீர்மானம்...
July 11, 2023
0
ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது கோபிசெட்டிபாளையத்தில் சரவணா தியேட்டர் ரோடு வாசு பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இதற்கு மாவட்டதுணைத்தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையும், மாவட்ட தலைவர் குருசாமி அவர்கள் முன்னிலையும் வகித்தனர். மாநில செயலாளர் V.S.செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் பாமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், கார்த்தி, தமிழ்செல்வன், C.கார்த்திக், மணிகண்டபிரபு, மூர்த்தி கோபி நகர தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஈரோடு மேற்கு மாவட்ட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.