கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தகுதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறையின் சார்பாக இதழியல் மற்றும் ஊடக வேலை வாய்ப்புகள் பற்றிய ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது . இந்நிகழ்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆ.மோகனசுந்தரம் மற்றும் துணை முதல்வர் முனைவர் சி.நஞ்சப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக,
கல்லூரி முதல்வர் முனைவர் ஆ.மோகனசுந்தரம் அவர்கள் இதழியல் துறையில் சிறப்பு பற்றியும் அத்துறையில் பணிபுரியும் ஊடகவியலர்களின் அர்ப்பணிப்பு பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இரண்டாம் ஆண்டு மாணவி ஜோதி சிறப்பு விருந்தினரை நேர்முகம் நடத்தி சீன மக்களின் வாழ்வியல் பற்றி பார்வையாளர்களிடம் அறியச் செய்தார். இரண்டாம் ஆண்டு மாணவி ரமிதா ஸ்ரீ என்பவர் அங்கு வந்திருந்த விருந்தினரை சீன மொழியில் பேசி வரவேற்றார்.
இதனையடுத்து சீன ஊடக பிரிவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் பண்டரிநாதன் மயில்சாமி அவர்கள் இதழியல் மற்றும் ஊடக வேலை வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். மற்றும் சீனாவில் உள்ள நவீன ஊடக நுணுக்கங்கள் பற்றிய செய்திகளை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார். முடிவில் கணிதத்துறை தலைவர் பி.ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள் மற்றும் கணிதத்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.