ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நுண்ணுயிரியல் துறை இணைந்து மக்கள் தொகை தின விழாவை கொண்டாடினர்.
இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்து மாணவர்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பதன் விளைவுகளை பற்றி எடுத்துரைத்தார்.
கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா முன்னிலை வகித்தார்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திரு. செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே இந்தியாவின் முந்தைய மக்கள் தொகை மற்றும் தற்போதைய மக்கள் தொகைக்கு உள்ள வித்தியாசம் மற்றும் எவ்வாறு இது அதிகரித்தது என்பதை பற்றியும் பேசினார்.
துணை ஆய்வாளர் திரு. சேதுராமன் பேசுகையில் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பொதுமக்களிடையே மாணவர்கள் எடுத்துக் கூற வேண்டும் என்று கூறினார்.
விழாவின் ஒரு பகுதியாக மக்கள் தொகை பற்றிய உறுதி மொழியினை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாட்டை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் முனைவர் எஸ். மஞ்சு, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. சி. கிருஷ்ணகுமார், நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர்கள்
ஆகியோர் செய்திருந்தனர்.