Type Here to Get Search Results !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது...

கோபிச்செட்டிபாளையம் ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் முனைவர்‌. ஆ. மோகனசுந்தரம் அவர்கள் முகாமிற்கு தலைமை தாங்கினார். 

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா முகாமிற்கு முன்னிலை வகித்து முதலாவதாக அவரது பங்களிப்பை அளிக்கும் விதமாக தன்னுடைய இரத்தத்தை தானம் செய்தார்.

சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலாளரும் பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. கே. சி. கருப்பணன் அவர்கள் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஊக்கத்தினையும் அளித்தார்.

முகாமில் கோபி அரசு மருத்துவமனை மருத்துவர் திரு. சிவசங்கர் தலைமையில் செவிலியர்கள் பிரியதர்ஷினி, சுமதி மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் மாணவர்களுடைய இரத்தத்தை சேகரித்துக் கொண்டனர்.

இந்த இரத்ததான முகாமில் சுமார் நூறு தன்னார்வ மாணவர்களுடைய இரத்தங்கள் சேகரிக்கப்பட்டது. 

கல்லூரியின் செயலாளர் திரு. கே. சி. கருப்பணன் அவர்கள் 
இரத்தம் வழங்கிய தன்னார்வ மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இம்முகாமை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. கிருஷ்ணகுமார்,  நுண்ணுயிரியல் துறைத்தலைவர் முனைவர். மஞ்சு மற்றும் உதவி பேராசிரியர்கள் திரு. அஜித்குமார், காயத்ரி,  சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் திரு. சேதுராமன் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.