ஈரோடு மாவட்டம் கோபி உட்கோட்டத்துக்கு உட்பட்ட கோபி, சிறுவலூர், கவுந்தப்பாடி, நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம் ஆகிய பகுதிகளின் காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், இரண்டாம் நிலை, முதல் நிலை காவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு
ஈரோடு ஐ பவுண்டேஷன் சார்பாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வை கோபி உதவி கண்காணிப்பாளர் வி தங்கவேல் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஐ பவுண்டேஷனின் தலைமை கண் மருத்துவர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் மற்றும் மருத்துவர் குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு காவல்துறையினருக்கு கண் பரிசோதனை அளித்தனர்.