பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நாடகம்....
July 28, 2023
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் சசிகலா அவர்களது உத்தரவின்படி, பேருந்து நிலையம், வாய்க்கால் ரோடு, 5 முக்கு பகுதியில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மையில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற பொருளில் குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், டெங்கு மலேரியா காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் வெங்கடாசலபதி நாடக சபா குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.