28.07.2023 இன்று கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில்
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அன்புமணி ராமதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதி வழக்கறிஞர் பேரவை மாவட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அன்புமணி ராமதாஸ் தங்கைகள் படை சத்யா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உடனடியாக அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய நிலையில் அன்புமணி ராமதாசை கைது செய்த தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.