கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் உறுப்பினர் சந்திப்பு கூட்டம் மற்றும் கடன் மேளா நடைபெற்றது.
இவ்விழாக்களில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.க.ராஜ்குமார் அவர்கள் தலைமை வகித்தும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/செயலாட்சியர் மரு.சு.செந்தமிழ்செல்வி அவர்கள் முன்னிலை வகித்தும், ரூ.214.88 இலட்சம் அளவில் பயிர்க்கடன், வியாபாரக் கடன், நடைமுறை மூலதனக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், டாப்செட்கோ கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்கள் வழங்கி, சேமிப்பு கணக்கு துவங்குதல், வைப்புகள் திரட்டியும், உறுப்பினர்கள் அனைவரும் கடன்களை முறையாக பயன்படுத்தி திருப்பி வங்கியில் செலுத்துமாறும், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அளவில் வங்கியின் நடைமுறையில் உள்ள PAYTM QR Code இயந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்/முதன்மை வருவாய் அலுவலர் திரு.இரா.இராமநாதன் அவர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் திரு.எஸ்.ஜானகிராமன் அவர்கள், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்/செயலாட்சியர் திரு.மு.பா.பாலாஜி அவர்கள், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.சுரேஷ் அவர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர் ஈரோடு திரு.மு.தர்மராஜ் அவர்கள், கோபி கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர் திரு.ப.கார்த்திக் அவர்கள், உதவி பொது மேலாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.