கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா செவிலியர் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா 21.08.2023 அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். ப. தங்கவேல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவரது உரையில், நாளுக்கு நாள் மருத்துவமனைகளும் அதனுடைய சேவைகளும் கூடிக்கொண்டே வருகிறது ஆதலால் செவிலியர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக கூறினார். மேலும் செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு 30 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறினார். ஆதலால் கல்லூரி பருவத்திலேயே
மாணவ மாணவியர்கள் ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு மற்றும் தன்னுடைய கடமைகளை புரிந்து கொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்தல் ஆகியவற்றை நன்று கற்று தேர வேண்டும். மேலும் மருத்துவ துறையானது வருடத்திற்கு 25% வளர்ச்சியை ஈட்டிவருகிறது, அதனால் வேலை வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருப்பதாக கூறினார்.
அதே போன்று துணை மருத்துவ படிப்புகள் முடித்த மாணவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் இருப்பதாக கூறினார். வளர்ந்துவரும் தொழில் நுடட்பங்களைப் பயன்படுத்தி நவீன அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் உபகரணங்களை நன்கு கற்று கல்லூரி பருவத்திலேயே சிறந்த வேலைக்கான நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இவ்விழாவில் கல்லூரியின் அரங்ககாவலர் திரு. கே. ஆர். கவியரசு அவர்கள் தலைமை தாங்கினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் உட்பட கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை மருத்துவ படிப்புகளுக்கான முதலவர். திருமதி. பியூலா வயலட் தங்கம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். செவிலியர் முதல்வர் முனைவர். முத்துக்கண்ணு அவர்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் மற்றும் நன்றியுரை வழங்கினார்.