தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் எழுத்தாளர்களின் சார்பாக 1993ல் தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர் எழுத்தாளர்கள் சேமநல நிதி கமிட்டி உருவாக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 1996 இல் வழக்கறிஞர்கள் எழுத்தாளர்களுக்கு சேமநலநிதி கேட்டு சென்னையில் மாபெரும் பேரணி நடத்தியது.
மேலும் 1999இல் தமிழ்நாடு அட்வகேட்ஸ் கிளர்க்ஸ் வெல்ஃபேர் பண்ட் சட்டம் 25/99 இல் சேமநல நிதியாக ரூ 50,000/- அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு 2013இல் சேமநல நிதி ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு 20.03.2020 இல் சேமநலநிதி ரூ. 4 லட்சமாக உயர்த்தி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 25.08.2023 இன்று தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர் எழுத்தாளர்கள் சேமநலநிதி கமிட்டியின் சார்பில் உறுப்பினர் தேர்தலானது தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட பார் அசோசியேஷனில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலை ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் ரமேஷ் குமார் அவர்கள் மற்றும் வழக்கறிஞர்களான வெங்கடாசலம், முருகேசன், கார்த்திகேயன் ஆகியோர் மற்றும் பலர் பொறுப்பேற்று தேர்தலை நடத்தினார்கள்.