நந்தா இயன்முறை மருத்துவக் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு கோயமுத்தூர் கே.ஜி. மருத்துவமனை மற்றும் முதுகலை மருத்துவக் கழகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியும், பேராசிரியருமான மருத்துவர் மோகன்காந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவினை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையேற்று பேசுகையில், கல்வி, விளையாட்டு போன்ற பிரிவுகளில் திறம்பட செயல்புரியும் நலிவடைந்த தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகவும். இக்கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவு கடந்த 28 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு இலவச இயன்முறை சிகிச்சை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், இக்கல்லூரி கற்பித்தல் மற்றும் உயர்கல்வி திட்டங்களை அமல்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதன் அடிப்படையில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினால் (NAAC) முதல் தகுதி (A Grade) வழங்கப்பட்ட கல்லூரி என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் மருத்துவர் மோகன்காந்தி அவர்கள் தரவரிசையில் முதல் இடத்தினை தக்கவைத்துக் கொண்ட மாணவிகள் எம். கவியலட்சுமி மற்றும் எஸ். பிரியா ஆகியோர்க்கு தங்க பதக்கங்களையும், 71 மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி பேருரையாற்றினார்.
அப்போது கூறுகையில், சிகரத்தின் மகிமையாக நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட உள்ள நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஈரோடு மாநகருக்கு தந்தருளிய ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இங்கு பட்டங்கள் பெற்ற மாணவர்கள் மூன்று கோணங்களில் மகிழ்ச்சியினை பெறுகின்றனர். முதலாவதாக மதிப்பு மிக்க இக்கல்லூரி நிறுவனத்தின் வாயிலாக பட்டங்களை பெறுவது, இரண்டாவதாக நீங்கள் பட்டதாரியாக உருவெடுப்பதற்கு பல இன்னல்களுக்கிடையே எல்லாவற்றையும் தியாகம் செய்த அவர்தம் பெற்றோர்கள் மற்றும் மூன்றாவதாக நோயாளிகள் பூரண குணமடைந்து செல்லும் போது "உங்கள் மாணவர்கள் நன்றாக சிகிச்சை அளித்தார்கள்" என்று கூறுவதை கேட்டு மகிழ்ச்சியடையும் ஆசிரியர்கள் என்றார்.
மேலும் உரையாற்றுகையில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்கள் "அல்மா மேட்டர்" ஆவார்கள். ஆதலால் "அல்மா மேட்டர்" என்தனை மாணவர்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. மாணவர்கள் தாங்களாகவே இந்த முடிவினை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேறு சிலவற்றிக்காக விட்டுவிடக் கூடாது என்பதனை ஸ்டீவ் ஜாப்ஸ் வார்த்தைகளை மேற்கோள் காட்டி எடுத்தரைத்தார்.
பட்டங்கள் பெற்று தனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்திய மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி, இன்றைய நாள் தங்களது வாழ்வின் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு பொன் நாள் என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணிவண்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தார், மேலும் இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் திரு. S. நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திரு. S. திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் S. ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் S. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.