இதில் முதன்மை மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பார் அசோசியேஷன் தலைவர் திரு. P. ரமேஷ் குமார், பார் அசோசியேசன் செயலாளர் R. வேலுசாமி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் C. ஈஸ்வரமூர்த்தி, அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் M. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
அதைத்தொடர்ந்து அட்வகேட் கிளர்க் அசோசியேஷன் தலைவர் திரு. கா. பா. ஆறுமுகம், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க பொருளாளர் திரு. டி. தீபன், அரசு வழக்கறிஞர், திரு. எஸ். வி. வாசுதேவன், அரசு வழக்கறிஞர், திரு. எம். அருள்செல்வன், பார் அசோசியேஷன் தலைவர், திரு. ஆர். ரமேஷ் குமார் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் செயலாளர், திரு. எம். முருகானந்தம் வாழ்த்துரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் ஈரோடு நந்தா இயன்முறை மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயன்முறை மருத்துவ மாணவர் திரு. ஷேன் எபி டேனியல், ஈரோடு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி செல்வி.K. லோகேஸ்வரி மற்றும் தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி செல்வி. T.மகா அரசி ஆகியோர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் மனிதவள பயிற்சியாளர் திரு. ஈரோடு கதிர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாண்புமிகு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அவர்கள் நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.