அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஈரோடு ஓம் சரவணபவ அறக்கட்டளையின் சார்பாக அதன் நிறுவனர் C. சுரேஷ்குமார் அவர்களின் தலைமையில்
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே காலனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, லக்காபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவல்பூந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி அவர்களுக்கு, 77வது சுதந்திர தின விழா (15.08.2023) அன்று
ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மேலும் தற்போது பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஓம் சரவணபவ அறக்கட்டளையின் தலைவர் E. கிருஷ்ணவேணி, செயலாளர் P. செல்வராஜ், துணைச்செயலாளர்கள் B. வெங்கடேஸ்வர மாதவன், R. முருகன், பொருளாளர் M. விஜயகுமார், அறங்காவலர்கள் V. பிரகாசம், G. மனோகரன், K. ராமசாமி, P. குணசேகரன், R. லலிதாம்பிகை, R. செல்வகுமார் ஆகியோர் மற்றும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.