ஸ்ரீ வெங்கடேஷ்வரா செவிலியர் கல்லூரி மற்றும் ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் உருவாகுதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ளுதல் மற்றும் மீட்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். முத்துக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் செவிலியர் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 200 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.