கோபிசெட்டிபாளையம் ஒத்தக்குதிரை அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பிசியோதெரபி கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு பிரியா விடை நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமை 05.08.2023 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமையேற்று கல்லூரியின் செயலாளர் திரு KC கருப்பண்ணன் அவர்கள் (பவானி சட்டமன்ற உறுப்பினர்), தலைவர் திரு.P வெங்கடாசலம் அவர்கள், இணைச்செயலாளர் திரு GP கெட்டிமுத்து அவர்கள், தலைமை நிர்வாக அதிகாரி திரு G கௌதம் அவர்கள் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் திரு நந்தகுமார் ராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை பிசியோதெரபி நான்காம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.