கல்லூரியின் இயக்குநர் திரு. கவியரசு அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer) திரு. கௌதம் அவர்களின் முன்னிலையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோ அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் பாலகுமார் சந்திரசேகர் அவர்கள் மருந்துகளின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக கல்லூரியின் இணை பேராசிரியை திருமதி. ஆசியாபி சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார். முடிவில் இணை பேராசிரியை திருமதி. மௌனிகா அவர்கள் நன்றி உரையாற்றினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்...
August 11, 2023
0
கவுந்தப்பாடி அருகேயுள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லூரியில் மருந்துகளின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் (Artificial Intelligence In Design and Synthesis of a drugs) பற்றிய அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.