Type Here to Get Search Results !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

10.08.2023 நேற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் Live wire, ஈரோடு இணைந்து நடத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் “Recent Trends in Computer Science” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் நடைபெற்றது. 
இதில் திரு. கே. சி. கருப்பணன் செயலாளர், தலைவர், திரு. P. வெங்கடாசலம், திரு. G. கௌதம் , முதன்மை அதிகாரி துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறையின் ஜூன் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நடந்த நிகழ்வுகளை செய்தித்தாள் வடிவில் வெளியிடப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆ. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார், அவர் பேசுகையில் கணினி துறையில் உள்ள நவீன வளர்ச்சிகளைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் மற்றும் சிறப்பு விருந்தினர் T. பிரபாகரன் கணினி துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினார். 
இவ்விழாவில் கணினி துறை தலைவர் திருமதி M. சுபா அவர்கள் வரவேற்று பேசினார்கள். 
முடிவில்  மூன்றாம் ஆண்டு BCA மாணவி N.R. சஞ்சனா நன்றி உரை கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.