கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் மற்றும் நர்சிங் கல்லூரியின் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி 09.08.2023 (புதன்கிழமை) அன்று ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து வெட்டுகிராய் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி. கவுதம் மற்றும் அறங்காவலர் திரு. கே. ஆர். கவியரசு ஆகியோர் கொடி அசைத்து துவக்கிவைத்தனர்.
மேலும் மழை நீர் சேமிப்பின் அவசியம், மரம் வளர்ப்பின் அவசியம் மற்றும் பருவ மாற்றம், மழை நீரானது மனித உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது ஆகும். அதாவது குடி நீரை மழைநீர் வழங்குகின்றது. விலங்குகள் பறவைகள் உயிர் வாழவும் அத்தியாவசியமாகும், மழை நீரானது மனித உயிர் வாழ்க்கைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் இன்றியமையாததாது மேலும் வீணாக மழை நீர் கடலுடன் கலப்பதைத் தடுத்து பயனடைய மழைநீர் சேமிப்பு அவசியமாகும். மழை நீரைச் சேமித்து நீண்ட காலம் பயன்படுத்துவதன் மூலம் நன்மையைப் பெறலாம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை மாணவ, மாணவிகள் பதாகைகளாக கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பேரணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் கோபிசெட்டிபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பேரணி வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்தனர்.
இந்நிகழ்வில் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் மற்றும் நர்சிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். முத்துக்கண்ணு, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 350 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியியல் மற்றும் நர்சிங் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.