கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் புரொடக்ஷன் இன்ஜினியர்ஸ் சொசைட்டி இணைந்து நடத்திய "பாதுகாப்பு துறையில் இயந்திரவியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு" குறித்த கருத்தரங்கு 10.08.2023 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சி ஸ்காலர் ட்ரைனிங் அகாடமி பயிற்சியாளர் திரு. கே. அன்பரசு அவர்கள் கலந்து கொண்டார். அவரது உரையில் மாணவர்களுக்கு இந்திய பாதுகாப்பு துறையில் உள்ள பல்வேறு விதமான பணியிடங்கள் அதற்கு உண்டான தேர்வுகள் பற்றி விளக்கினார், அத்தேர்வுகளுக்கான தகுதி மற்றும் அதில் வெல்வதற்கான வழிமுறைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதன் பின்னர் பாதுகாப்பு துறையில் இயந்திரவியல் துறையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பேசினார். இக்கருத்தரங்கில் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இக்கருத்தரங்கில் இயந்திரவியல் துறையின் நான்காம் ஆண்டு மாணவர் கே. பூபதி அனைவரையும் வரவேற்றார். மேலும் இக்கருத்தரங்கில் இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் சு. பிரசாகம் அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இயந்திரவியல் நான்காம் ஆண்டு மாணவர் பி புவிந்தராஜ் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. த. மோகன் ராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.