07.08.2023 நேற்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக, பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள பள்ளிபாளையம் நகர திமுக கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர திமுக அவைத்தலைவர் குலோப் ஜான், நகர திமுக செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சேர்மன் செல்வராஜ், பள்ளிபாளையம் நகர்மன்ற துணைத் தலைவரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதி பாலமுருகன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் குரு சசி, நகர நிர்வாகிகள் ஜிம் செல்வம், நூல் செல்வம், மனோகரன் மற்றும் பள்ளிபாளையம் நகர திமுக நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.