கோபிசெட்டிபாளையம் நகராட்சி தினசரி சந்தை பகுதியில் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுங்கரா அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது மண் எனது தேசம் என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்கள் உத்தரவின் படி, நகராட்சி தினசரி சந்தை பகுதியில் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து, பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் செல்ல துணியாலான மஞ்சள் பை போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் கடை கடையாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஜயன், செல்வகுமார், விசுவநாதன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அருள் பிரசாத், சத்யாவதி, வைஷ்ணவி, பூங்கொடி, காளியம்மாள், அருண் பிரனேஷ், சுகீந்திரன் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அறிஞர் அண்ணா அனைத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.