கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் தலைமையில், நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்கள் முன்னிலையில், மேலாளர் ஜோதிமணி, துப்புரவு அலுவலர் சோழராஜ், உதவி பொறியாளர் ரவி, ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சௌந்தரராஜன், கணினி உதவி திட்ட அமைப்பாளர் செந்தில்நாதன், கணக்காளர் பழனியப்பன் உட்பட அலுவலக பணியாளர்கள் அனைவரும் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
"நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி,
இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும்
நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார
உறுதிமொழி
எடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து
வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள்
மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளை பின்பற்றியும்
தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்" என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.