இவ்விழாவில் முதல்வர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை ஏற்று விழாவினை துவங்கி வைத்தார். மேலும் அவரது உரையில், பங்குச்சந்தையில் பங்குகள் வாங்குவது மற்றும் விற்பது அதன் முறையை விளக்கிக் கூறினார்.
துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறை தலைவர். சி. நஞ்சப்பா அவர்களின் உரையில், பங்குச்சந்தையும் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் அது தொடர்பான படிப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோயம்புத்தூர் ஏடிபி எடு டெக்கின் முனைவர் கே பிரபாகரன் அவர்களின் உரையில் பங்குச்சந்தையில் வணிக ரீதியான நெளிவு சுழிவுகள் பற்றி மிகத் தெளிவாக கூறினார், மேலும் வணிகவியல் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பங்குச்சந்தை துறையில் வேலை வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறினார். புதிதாக பங்குச் சந்தையில் தொடர இருப்பவர்கள் அதற்கான டிமேட் வங்கி கணக்கு முறைகள் பற்றி விளக்கமாக கூறினார்.