கோபிசெட்டிபாளையம் வைரவிலா முதல் நிலை பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செட்டிபாளையம் சதுரங்க போட்டி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட சதுரங்க விளையாட்டு கழகத்தின் செயலாளர் ரமேஷ், கோபி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.