3ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட அமெச்சுர் சிலம்ப சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிக்கு ஈரோடு மாவட்ட அமெச்சுர் சிலம்ப
சங்க தலைவர் வினோத்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் பொன். லோகேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தார். இதில் 10, 14, 18, 35 வயதுக்கு உட்பட்டோர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குத்து வரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு, ஒற்றை வாழ் வீச்சு, ஒற்றை சுருள் வால் வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, இரட்டைவால் வீச்சு உட்பட 13 பிரிவுகளில் போட்டியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு மாலை மற்றும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டது.
இதில் நந்தா கல்லூரி முதன்மை கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.