நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று நாமக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், நடைபெறும் ஊழல் மற்றும் முறையீட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உடனடியாக விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், ஆலம்பாளையம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட கூடிய வீடுகளுக்கு குறிப்பிட்ட உயரத்தை தாண்டியும் முறைகேடாக சில குறுகிய தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பதிவு செய்து அதிக தொகை வசூல் செய்வது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சௌமியா, மாவட்டத் துணைத் தலைவர் பத்மநாபன், ஒன்றிய தலைவர் கார்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முரளி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.