தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க
மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம். ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொ. வெற்றி வேலன், மாவட்ட செயலாளர் பி. பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் ஜோசப் ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :
நேரடி பெயிண்டிங் வேலை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து தொழிலை மீட்பது, பெயிண்டிங் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓவியர் மற்றும் ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசிடம் கேட்பது, விலை முரண்பாடுகளை தடுத்து நம்முடைய உழைப்பிற்கு நாமே விலை நிர்ணயம் செய்வது, பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படுவது. வட மாநில தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை தடுத்து வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பெயிண்டர்களுக்கு மற்றும் ஓவியர்களுக்கு தலைமை சங்கத்திலிருந்து உதவி செய்வது ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் சங்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் பி செல்வம் நன்றி கூறினார்.