Type Here to Get Search Results !

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ...

கவுந்தப்பாடி அருகில்
உள்ள ஒத்தக்குதிரை ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
18 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதல் இடமும்,  சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனர்.
வளையப்பந்துப் போட்டியில் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதல் இடமும், கொங்கு வெள்ளாளர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்றனர்.
மாணவர்களுக்கான கேரம் போட்டியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல் இடமும், KSR IT கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடமும் மற்றும் சதுரங்கப் போட்டியில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல் இடமும், நந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடமும் பெற்றனர். 
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டி கல்லூரியின் செயலாளர் திரு.K.C.கருப்பணன் MLA அவர்கள் பரிசுகள் வழங்கினார். மேலும் அவர் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் P.வெங்கடாச்சலம், இயக்குநர் K.R.கவியரசு, முதன்மை செயல் அலுவலர் G.கௌதம். கல்லூரி முதல்வர் திரு.S.பிரகதீஸ்வரன், கல்லூரி துணை முதல்வர் திரு.P.மணி மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் கலந்து கொண்டனர். 
இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் திரு.N.பிரபாகரன் அவர்கள் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.